கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றிற்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணையவழியில் Bulk permit வழங்கும் நடைமுறை ஜூன்-2024 முதலும் மற்றும் e-permit வழங்கும் நடைமுறை ஏப்ரல்-2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றிற்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருட்கள் எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த மெய்யிலச்சினைகள் ஒட்டப்பட்ட போக்குவரத்து அனுமதிச்சீட்டுகள் பயன்படுத்துவது நிறுத்தம் செய்யப்படுகிறது. புதியதாக பதிவு செய்யப்படும் கிரஷர் மற்றும் இருப்புக் கிடங்குகளின் உரிமையாளர்கள் https://mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்.
தற்போது கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருட்கள் எடுத்துச்செல்ல வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு https://mimas.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மின்னணு முறையில் வழங்கப்படும் போக்குவரத்து சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். இந்த நடைமுறை கனிம விற்பனையை எளிமையாக்கி வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிச்சீட்டு இல்லாமல் கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கனிமங்களை எடுத்து செல்லும் வாகனங்களை உரிய விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More: சூப்பர் திட்டம்..! பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கும் திட்டம்…! உடனே இதை செய்யுங்க