அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது திருமாவளவனை கொச்சையாக பேசிய ஆ.ராசா உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ யாரையும் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.. அரசியலில் கருத்து வேறுபாடுகள் வரலாம்.. ஆனால் தனிப்பட்ட தாக்குதல் நடத்தக் கூடாது..
ஆ.ராசா சொன்ன வார்த்தைகள் திருமா அவர்களையும் காயப்படுத்தி உள்ளது.. விசிக தோழர்களையும் காயப்படுத்தி உள்ளது.. திருமாவளவன் அவர்கள் பதவிக்கோ பணத்திற்கோ ஆசைப்படுபவர் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும்.. அவர் நினைத்திருந்தால் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கலாம்.. இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம்.. ஆனால் வன்னிஅரசு தான் அமைச்சராக வேண்டும் என்று அவரை அமைச்சராக்கி உள்ளார். அவரின் முடிவு ஒட்டுமொத்த கட்சியும் நினைத்து பெருமைப்படுகிறது.. எனவே திமுகவும், திமுக ஐடி விங்கும் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்..
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் ஏதோ ஒரு பெண்ணை இழிவுப்படுத்தும் வார்த்தைகளை திமுகவினர் பயன்படுத்துவர்.. பெண்ணின் உறவை வைத்து பேசும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி ஒரு கட்சியின் தலைவரை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. திமுக எம்.பி. ஆ.ராசா உடனடியாக திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரு கட்சியின் தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியல்ல.. திருமாவளவனை விமர்சித்து ஆ.அராசா வெளியிட்ட பதிவினை வன்மையாக கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்தார்..
ஆ.ராசா என்ன சொன்னார்..?
இன்று தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.. தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானும் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.. வன்னிஅரசுக்கு சமூக நீதித்துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையின நலத்துறையும் ஒதுக்கப்படுள்ளது..
தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் கூறிவந்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது.. இதையடுத்து திமுக தரப்பு விசிகவை கடுமையாக விமர்சித்தது. திமுக எம்.பி. ஆ.ராசா, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்..
தனது எக்ஸ் பக்கத்தில் “ “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று பதிவிட்டிருந்தார்..
அவரின் இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை நீக்கிய ஆ.ராசா மற்றொரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..



