திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
விஜயவாடாவிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த ஆம்னி பஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, மின்னூர் பகுதியில் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. மேம்பாலம் கட்டும் பணிக்காக இடப்பட்டிருந்த மண் குவியலில் மோதி, பஸ் சாலையில் கவிழ்ந்தது.
இந்த திடீர் விபத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய போலீசாரும் நெடுஞ்சாலைத் துறையினரும் விரைந்து வந்து கிரேன் எந்திரம் மூலம் பஸ்ஸை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விபத்தால் 3 கிமீ வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஒட்டுனர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, ஒரு தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமின்றி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து ஏற்படுகின்ற பாதுகாப்பு குறைபாடுகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் வெளிக்கொணர்கிறது. அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்ற இந்த நெடுஞ்சாலைகளில், வேகக் கட்டுப்பாடுகள், சிசிடிவி கண்காணிப்பு, ஓய்வு மையங்கள், சோதனை சாவடிகள் போன்ற அடிப்படை வசதிகளே இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Read more: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?