5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் கத்வா மாவட்டத்தில் உள்ள மொகத் பகுதியில் செயல்படும் மதரசா எனப்படும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 5 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அப்போது, அதே பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமியை, ஆசிரியர் மவுல்வி அப்துல் சமத் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சிறுமி சோர்வுடனும், உடல்நிலை சரியில்லாமலும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மதரசா பள்ளி ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நதரோத்தம் மிஷ்ரு கூறுகையில், “அந்த மதரசாவில் வேறெந்த சிறுமியாவது இம்மாதிரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளாரா? என்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.