கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியை சேர்ந்தவர் கலிபுல்லா (66). இவர் வாகனங்கள் சுத்தம் செய்யும் சர்வீஸ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் அரவிந்த் (26) என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்ததார். கலிபுல்லா நேற்று முன்தினம் இரவு காரை சுத்தம் செய்யுமாறு அரவிந்திடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து மின்மோட்டாரை இயக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு காரை கழுவிக் கொண்டிருந்தார் அரவிந்த். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு தொழிலாளியான ஷாகில் (18) என்பவர், அரவிந்த்தை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது அவர், மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மயங்கி விழுந்தனர்
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவௌம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான கலிபுல்லா மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை கழுவியபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: முடி உதிர்தல், பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?. இந்த எலுமிச்சை, வேம்பு டிப்ஸை டிரை பண்ணுங்க!.



