சென்னை சூளைநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது நர்ஸ் ஒருவர், பெற்றோர் மூலம் மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தார். அங்கு சூர்யா என்ற இளைஞர் அவரை தொடர்பு கொண்டு, காதல் வார்த்தைகளில் பேசிப் பழகினார். நாளுக்கு நாள் நெருங்கி பழகியதுடன், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் நர்ஸை நம்ப வைத்துள்ளார் .. இதனால் சில இடங்களுக்கு இருவரும் சுற்றித்திரிந்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கல்யாணத்துக்கு பிறகு சென்னையில் சொந்த வீட்டில்தான் வாழணும்.. என்னிடம் 40 லட்சம் ரூபாய் இருக்கு.. மிச்சம் 10 லட்சம் இருந்தால் கடன் இல்லாமலேயே சொந்தமாக வீட்டை வாங்கிடலாம் என்று சொல்லி உள்ளார். உடனே நர்ஸும், தன் சேமிப்பில் வைத்திருந்த பணம், 8 சவரன் நகை, இதைத்தவிர, பேங்கில் லோன் போட்டு ரூ.8.7 லட்சம் பணம் என அனைத்தையும் சூர்யாவிடம் தந்துள்ளார்.
பின்னர் சூர்யா திருமணத்திலிருந்து பின்வாங்கியதோடு, நெருக்கமான வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியும் தலைமறைவானார். அதிர்ச்சி அடைந்த நர்ஸ் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சூர்யாவை தேடி நெல்லை, விருதுநகர் பகுதிகளில் சுமார் 15 நாட்கள் தேடினார்கள். இறுதியில் விருதுநகரில் சூர்யா கைது செய்யப்பட்டார். சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது தப்பிக்க முயன்ற அவர் கீழே விழுந்ததில் காலை முறிந்து, பின்னர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. சூர்யா, ஒரு நர்ஸ் மட்டும் அல்லாமல், 50க்கும் மேற்பட்ட பெண்களை இதே முறையில் ஏமாற்றி, உடலுறவு வைத்து, பணமும் நகையும் பறித்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். பெண்கள் எளிதாக நம்புவதற்காக தனது காரில் “SPCL Secretary International Human Rights & Crime Control Council” என்ற போலி போர்டை வைத்திருந்ததாகவும், தன்னை ரியல் எஸ்டேட் பிஸினஸ்மேன் என கூறி ஏமாற்றியதாகவும் விசாரணையில் கூறியுள்ளார். சூர்யாவின் தந்தை மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது கூடுதல் அதிர்ச்சியாகும்.
Read more: 90 சதவீத மாரடைப்பு நிகழ்வுகளுக்கு இதுதான் காரணம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!