மனைவி விவாகரத்து செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் எந்தவொரு உணவையும் எடுத்துக்கொள்ளாமல் பீர் மட்டுமே குடித்து வந்தத இளைஞன் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் ராயாங் மாகாணத்தில் வசித்து வந்தவர் தவிசாக் (44). இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் ஏற்பட்ட மன கசப்பில் விவாகரத்து செய்திருந்தார். ஆனால் அந்த பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிசாக் கடும் மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார். குடும்பத்தினர், நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக வசிந்து வந்த தவிசாக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்.
அந்த மனநிலையில், அவர் தினமும் தொடர்ந்து பீர் மட்டுமே குடித்து வந்ததாக தெரிகிறது. ஒருமாதமாக உணவு இல்லாமல் இருந்ததால் அவரது உடல் முழுமையாக சோர்ந்து, முக்கியமான உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. ஒரு தொண்டு நிறுவனம் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்ற நிலையில் இருந்தாலும் அந்த நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார்.
அவரது அறையில் சுமார் 100 பீர் பாட்டில்கள் காணப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அதிக அளவில் பீர் குடித்ததன் விளைவாக மூளை செயலிழப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதோடு, உணவுக்குறைவால் உடல் முழுமையாக தளர்ந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், தாய்லாந்து மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மனச்சோர்வையும், தனிமையையும் சமாளிக்க உளவியல் ஆலோசனைகளும், நலவாழ்வு விழிப்புணர்வும் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
Read more: கடந்த வாரம் ரூ.3000 வரை சரிந்த தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..