நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்த இளம்பெண்.. காதலன் வெறிச்செயல்..!! தஞ்சையை உலுக்கிய பகீர் சம்பவம்..

thanjai murder 1

தஞ்சாவூரை அருகே மேலகளக்குடி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் மகள் காவியா (26) . பி.எட் பட்டதாரியான இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியை ஆக வேலை பார்த்து வந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்த அஜித்குமார் (வயது 29) என்பவரை கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காவியா அஜித் குமாரை காதலித்து வந்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது..


இதனால் காவியாவை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு காவியாவை திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஆனால் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை தனது காதலன் அஜித் குமாருக்கு காவியா தெரிவிக்காமல் அவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் காவியாவும் அஜித் குமாரும் செல்போனில் பேசும் பேசியுள்ளனர். அப்போது காவியா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அத்துடன் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அஜித் குமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை காவியா வழக்கம்போல பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே அவர் சென்றபோது காவியாவை வழிமறித்த அஜித்குமார், நிச்சயதார்த்தமானதை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என கேட்டு தகராறு செய்தார்.

ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதன் பிறகு அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி அஜித் குமார் சரண் அடைந்துள்ளார். அஜித் குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: “ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க பாடுபடுவேன்..” செங்கோட்டையன் உறுதி..!

English Summary

A young woman hid her engagement from her boyfriend.. A young man’s act of madness..!

Next Post

திருவாரூர், மயிலாடுதுறையை தொடர்ந்து.. புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் அரை நாள் விடுமுறை.!!

Fri Nov 28 , 2025
Following Tiruvarur and Mayiladuthurai.. Pudukkottai district schools and colleges have also been declared half-day holiday..!!
rain school holiday

You May Like