ஆதார் மோசடிகள்..!! ’மக்களே யாரும் இப்படி பண்ணாதீங்க’..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

நாட்டில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும். தற்போது அனைத்து சேவைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆதார் மோசடிகள்..!! ’மக்களே யாரும் இப்படி பண்ணாதீங்க’..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

நம்முடைய ஆதாருடன் மொபைல் எண், வங்கி மற்றும் பான் கார்டு எண்ணை இணைத்து வைத்துள்ளதால் எதிர்பாராத விதமாக உங்களின் ஆதார் கார்டு மோசடி நபர்களிடம் சிக்கினால் வங்கி சார்ந்த விவரங்கள் அனைத்தும் திருடப்படும். அதேபோல், அமைப்பு மற்றும் வங்கியிலிருந்து பேசுவது போல ஆதார் அட்டைதாரர்களை அணுகி ஒரு லிங்கை நாங்கள் அனுப்புவோம் அதனை கிளிக் செய்து உடனே ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனை நம்பி மக்கள் அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படும்.

ஆதார் மோசடிகள்..!! ’மக்களே யாரும் இப்படி பண்ணாதீங்க’..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

இந்நிலையில், எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றுவெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆதாரை புதுப்பிக்கும் அமைச்சகம் தனிப்பட்ட நபர்களை தொலைபேசி மூலமாக அழைத்து, ஆதார் அமைப்பில் இருந்து போன் செய்வதாக கூறினால், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும், ஆதாரை புதுப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வருக்கு நடந்த சம்பவம்.!

Thu Oct 27 , 2022
பிரதமர் மோடி குஜராத் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் , அப்போது அங்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளையும் அவர் அறிவித்து வருகின்றார். இத்தகைய நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் […]

You May Like