BJP உடன் அமமுக கூட்டணி..!! எத்தனை தொகுதி..? எந்த சின்னத்தில் போட்டி..? டிடிவி தினகரன் அறிவிப்பு..!!

பாஜக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை நான் அளித்துள்ளேன். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனும் இன்று தொலைபேசியில் பேசினோம். கூட்டணியில் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகள் என்ன என்பது ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். கடிதம் மூலமாக கொடுத்துவிட்டோம். தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றியை பாஜக பெற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அணிலை போல் உதவிகரமாக அமையும்.

எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி என்பது எங்களுக்கு பிரச்சனை கிடையாது. எங்களிடம் எந்த நிர்பந்தத்தையும் பாஜக அளிக்கவில்லை. பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும்” என்று தெரிவித்தார்.

Read More : மீண்டும் MLA ஆகிறார் மாஜி அமைச்சர் பொன்முடி..!! அழைப்பு விடுத்த சட்டப்பேரவை செயலகம்..!!

Chella

Next Post

Aadhaar | மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்..!! பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!

Mon Mar 11 , 2024
மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே ஆதார் கார்டு பெறவும், புதுப்பிக்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ளார். இதில், மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, ஏற்கனவே உள்ள ஆதாரில் திருத்தம் செய்வது போன்ற வசதிகளை, பள்ளியிலேயே எற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

You May Like