மறைந்த பிரபல நடிகர் மிஹிர் தாஸ் வீட்டில் மற்றொரு சோகம்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

மறைந்த ஒடியா நடிகர் மிஹிர் தாஸின் இளைய மகன் அக்லாந்த் தாஸ் காலமானார். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு உயிரிழந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.

image 13

பழம்பெரும் ஒடியா திரைப்பட நடிகர் மிஹிர் தாஸ் ஜனவரி 11, 2022 அன்று இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 63 வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டன, மேலும் அவரது மறைவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசா ஆளுநர் கணேஷி லால் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

மிஹிர் தாஸ் இறந்தபோது இளைய மகன் அக்லாந்த் தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது தான் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

தேசியக் கொடியை வடிவமைத்தவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..? யார் இந்த பிங்காலி வெங்கையா..?

Thu Jan 26 , 2023
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள பட்லபெனுமருவை சேர்ந்த பிங்காலி வெங்கையா. இவர், ஆகஸ்ட் 2, 1876 அன்று பிறந்தார். இவர் ஒரு விவசாயி, புவியியலாளர். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளர் மற்றும் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுபவர். இதனால் அவர் ‘ஜப்பான் வெங்கையா’ என்று அழைக்கப்பட்டார். இவர், பிரிட்டிஷ் இந்திய ராணுவ சிப்பாயாக போரில் ஈடுபட தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் […]
தேசியக் கொடியை வடிவமைத்தவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..? யார் இந்த பிங்காலி வெங்கையா..?

You May Like