திமுக சார்பில் நடிகர் சூர்யா போட்டி..? இது லிஸ்ட்லயே இல்லையே.. ஸ்டாலின் போட்ட பலே கணக்கு..!!

surya stalin 1

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.


திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது. இதனால் அக்கூட்டணியை வீழ்த்த 2026ல் நடிகர் சூர்யாவை களமிறக்க திமுக முயற்சித்து வருவதாக பிரபல செய்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக விஜய் வருகையால் கொங்கு மண்டலத்தில் திமுக வாக்கு சரியலாம் என்பதால் அதே பகுதியை சேர்ந்த சினிமா வெளிச்சத்தில் இருக்கும் சூர்யாவை களமிறக்கினால் திமுக வெற்றிக்கு உதவும் என ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திரை பிரபலங்களை முன் நிறுத்தி வாக்கு சேகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் நடிகர் சூர்யாவை களமிறக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.. எனினும் திமுகவின் வியூகம் தேர்தலில் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.

Read more: நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை… பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு குட் நியூஸ்…!

English Summary

Actor Surya contesting on behalf of DMK..? This is not on the list.. Stalin’s calculation is correct..!!

Next Post

ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா!. வடிவமைத்தது யார்?. ஒரேயொரு தமிழருக்கு கிடைத்த பெருமை!. முதலில் எந்த வீரருக்கு வழங்கப்பட்டது?.

Thu Aug 14 , 2025
இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது. ராணுவம், கடற்படை அல்லது விமானப்படை என எதுவாக இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த கௌரவம் […]
Param Vir Chakra 11zon

You May Like