மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி…! மத்திய அரசு கொடுத்த ஒப்புதல்…!

money Central govt modi 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மற்றும் குஜராத் மாநிலகளுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவியாக 707.97 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.


தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.மேலும் இந்த உயர்நிலைக்குழு ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு 903.67 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி அம்மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையை விரிவாக்கம் செய்வதற்கும், தீயணைப்பு சேவைகளை நவீனமயமாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். ஒட்டுமொத்த நிதியான 603.67 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்காக 676.33 கோடி ரூபாயாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. மாநிலங்களில் உள்ள மாநில பேரிடர் மீட்பு படைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தோகை தவிர கூடுதல் நிதியாக இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. 2025-26-ம் நிதியாண்டில் 27 மாநிலங்களில் உள்ள மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு இதுவரை 13,603.20 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மேலும் 12 மாநிலங்களில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு 2024.04 கோடி ரூபாயையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.இவை தவிர கூடுதலாக 4571.30 கோடி ரூபாய் மாநில பேரிடர் இடர்பாடு தடுப்பு நிதியிலிருந்து 21 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 372. 09 கோடி ரூபாய் தேசிய பேரிடர் இடர்பாடு தடுப்பு நிதியிலிருந்து 9 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று முதல் 100% பாதுகாப்பு..!! ஆன்லைன் பரிவர்த்தனையில் அதிரடி மாற்றம்..!! Gpay, PhonPe-வை உடனே அப்டேட் பண்ணுங்க..!!

Wed Oct 8 , 2025
கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]
UPI New rule 11zon

You May Like