தமிழகமே…! வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…!

Tn Government registration 2025

சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு.


மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான 15.12.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

40 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்திற்கு வந்த பெண்ணை பணிநீக்கம் செய்த நிறுவனம்.. நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு..!

Sat Dec 13 , 2025
ஸ்பெயினில் ஒரு விசித்திரமான காரணத்துக்காக ஒரு பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தினமும் அலுவலக நேரத்திற்கு 40 நிமிடங்கள் முன்பாக அவர் வந்தது தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் நிறுவனத்தையும் நீதிமன்றத்தையும் ஆதரிக்க, சிலர் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. பெண் ஊழியர் ஏன் நீக்கம் செய்யப்பட்டார்? அந்த ஸ்பானிஷ் நிறுவனத்தின் விதிப்படி, […]
woman layoff

You May Like