ADMK | வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை..!! இன்று வெளியிட தயாராகிறது அதிமுக..?

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் நேரில் கருத்து கேட்டது.

அவர்கள் தெரிவித்த கருத்துக்களை பரிசளித்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அதிமுக வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றன.

Read More : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் விதிமீறல் புகார்..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

Chella

Next Post

Election Breaking | தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

Wed Mar 20 , 2024
முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் சத்தீஷ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் […]

You May Like