30 வருடம் கழித்து கிடைத்த நீதி.! பாலியல் தொழிலாளியை 140 முறை குத்தி கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்.!

லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில், பாலியல் தொழிலாளியை 140 முறை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், 30 ஆண்டுகள் கழித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த படேல் என்பவர் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொலம்பியாவை சேர்ந்த மெரினா கொப்பல் என்ற பெண் மசாஜ் செய்பவராகவும், சில நேரங்களில் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். 1994ஆம் ஆண்டு அவர் மிகவும் கொடூரமான முறையில், 140 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

2022 வரை அவரை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றம் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மெரினாவின் மோதிரத்தில் இருந்த முடியின் இழைகளை டிஎன்ஏ டெஸ்ட்க்கு உட்படுத்திய போது, அந்த கொலையை செய்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படேல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட, ரத்தம் தோய்ந்த காலடித்தடமும், படேலுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டது. தடயவியல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களே, 30 வருடங்கள் கழித்து, தற்போது 51 வயதாகும் குற்றவாளியை கண்டுபிடிக்க செய்தது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படேலின் வீட்டிற்கு அருகே கொலை செய்யப்பட்ட மெரினாவின் வங்கி அட்டை கண்டுபிடிக்கப்பட்டது, படேலுக்கு எதிரான ஆதாரங்களை வலுவாக்கியது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் பெய்லி, மற்றும் வேல்ஸின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு படேலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 30 வருடங்கள் கழித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, தகுந்த தண்டனை வழங்கப்பட்டது, மெரினாவின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

English summary: A 51 year old Indian was given life sentence after 30 years of stabbing 140 times and killing a sex worker.

Read more: கிருஷ்ணகிரி: ” ‘கிரிக்கெட் பேட்’ டால் அடித்து கணவன் கொலை..”! போதையில் தகராறு செய்ததால் மனைவி மாமியார் வெறி செயல்.!

Next Post

திமுக வெற்றி கூட்டணி.! சீட் முடிவான பின்பு தொகுதி குறித்து பேச்சு வார்த்தை.! பத்திரிகையாளர் சந்திப்பில் துரை வைகோ தகவல்!

Tue Feb 20 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மெகா கூட்டணியை உருவாக்கியது. சில மாநிலங்களில் இந்தக் கூட்டணியில் மோதல் போக்கு நீடித்தாலும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறது. மேலும் இந்தக் கூட்டணிக்கான வெற்றி […]

You May Like