கணவன் உறங்கிய பிறகு கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்.. பார்க்க கூடாததை நேரில் பார்த்த மகள்..! அடுத்து நடந்த ட்விஸ்ட்..

sex affair 1

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணமாகி 34 வயதில் மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரம் கள்ளக்காதலனை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.


இந்த விஷயம் கணவருக்கு தெரியவரவே வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதன் பின்னர் இருவரும் தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றனர். மீனவரின் மகள் அவருடனே படுத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து எழுந்த மீனவர் மனைவி விபரீத முடிவு எடுத்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அவர் படுத்திருந்த அறை கதவை திறந்து பார்த்தார். ஆனால் அவர் பார்த்த காட்சியால் அவர் மனம் நொறுங்கிப் போனது.. கணவர் வீட்டில் இருந்தபோதே மனைவி தனது கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்த மீனவர் இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கினார். அப்போது கள்ளக்காதலனுக்கும் மீனவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். ஊரார் முன்னிலையில் கையும் களவுமாக சிக்கியதால் அவமானம் அடைந்த கள்ளக்காதலன் பிளேடை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த குளச்சல் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more: பாகிஸ்தான் ISI தொடர்புடைய கையெறி குண்டு தாக்குதல் சதி முறியடிப்பு..10 பேர் கைது; பஞ்சாப் போலீஸ் அதிரடி..!

English Summary

After her husband goes to sleep, she invites the murderer home and has sex.

Next Post

Flash : பீகாரில் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக கூட்டணி.. இந்தியா கூட்டணியின் நிலை என்ன?

Fri Nov 14 , 2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66.91 சதவீதமாக இருந்தது, இது இதுவரை இல்லாத அளவுக்கு பதிவான அதிக சதவீதமாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது, 65.08 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்துள்ளது, வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக […]
modi nithis tejaswi bihar 1

You May Like