Alert: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று காலை கரையை கடக்க வாய்ப்பு…!

cyclone rain 2025

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று காலை கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செப்.28 முதல் அக்.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

60 ஆண்டு கால தசாப்தம்!. மிக்-21 போர் விமானம் பிரியாவிடை!. இந்தியாவின் 7வது பெண் போர் விமானி பிரியா சர்மா யார்?.

Sat Sep 27 , 2025
இந்திய விமானப்படையில் ஆறு தசாப்தங்களாக பணியாற்றிய பிறகு, மிக்-21 போர் விமானம் செப்டம்பர் 26 அன்று ஓய்வு பெற்றது. சண்டிகர் விமானப்படை தளத்தில் இந்த ஜெட் விமானத்திற்கு பிரமாண்டமான பிரியாவிடை அளிக்கப்பட்டது. பெண் விமானி ஸ்குவாட்ரான் லீடர் பிரியா சர்மாவும் பிரியாவிடை விழாவில் கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏபி சிங் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். பாதல் 3 என […]
mig 21 farewell

You May Like