பழமையும் பக்தியும் நிறைந்த தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இங்கு வடமாநிலத்தின் புகழ்பெற்ற பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலை பின்பற்றி, அதேபோல் அனைவருக்கும் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்கும் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில், ஒரே நேரத்தில் 5,000 பக்தர்கள் அமர்ந்து வழிபடக்கூடிய அளவுக்கு பரந்தது. கோவில் கட்டுமானம், மதம், ஜாதி, இனம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்தவாசலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதான மண்டபம், பசுக்கள் வளர்க்கப்படும் பிரத்யேக கோசாலை, பொன் போன்று ஒளிரும் விதானம் என ஒவ்வொரு பகுதியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த ஆலயம் பக்தியையும் பண்பாட்டையும் இணைக்கும் தலமாக விளங்குகிறது.
இந்த கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்.
Read more: இறந்தவர்கள் அழுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா..?



