தமிழகம் முழுவதும்.. நாளை 1000 இடங்களில்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்புளுயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குழந்தைகளிடையே இந்த `ப்ளூ’ வகை காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், இது 3 முதல் 4 நாட்கள் நீடிக்கிறது என்றும் கூறப்படுகிறது… ழந்தைகளுக்கு ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தமிழகம் முழுவதும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..

இந்நிலையில் தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166-ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. மேலும், தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவும் வரும் நிலையில் சளி, காய்ச்சல் என எந்த அறிகுறி இருந்தாலும் இந்த சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.. இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்..

Maha

Next Post

வரும் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

Tue Sep 20 , 2022
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர் மாவட்டங்கள், புதுவை […]

You May Like