தமிழகமே…! இன்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்…! அரசு உத்தரவு

tn gov diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார்.


தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம் ஆகும். தமிழகத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டால், dphepi@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிக்க வேண்டும். இன்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலகளவில் பிரபலமடைந்த இந்தியாவின் ஆதார் அம்சம்!. இங்கிலாந்தில் 'பிரிட் கார்டு' அறிமுகம்!. பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாராட்டு!.

Mon Oct 20 , 2025
இந்தியாவின் ஆதார் முறையால் ஈர்க்கப்பட்டு ‘பிரிட் கார்டு’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார். இந்தியாவின் ஆதார் முறையை “குறிப்பிடத்தக்க வெற்றி” என்று பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , “பிரிட் கார்டு” எனப்படும் தேசிய டிஜிட்டல் ஐடியின் சொந்த பதிப்பை இங்கிலாந்து உருவாக்கும் என்று அறிவித்துள்ளார் . இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் சட்டவிரோத வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது […]
britain aadhar pm

You May Like