EB : இதை எல்லாம் உடனே செய்து முடிக்க வேண்டும்… மின்வாரியம் அதிரடி உத்தரவு…!

EB tn 2025

நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது.

இதுபோன்றவற்றை விரைந்து சரி செய்வதோடு, வருங்காலங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் மின்வாரியத் தலைவரை எதிர்பார்க்க வேண்டிய சூழலை ஏற்படுத்தக் கூடாது” என தெரிவித்திருந்தார். அனைத்து அலுவலர்களுக்கும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள், அவமதிப்பு வழக்கு போன்றவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாத வழக்குகளில் உடனடியாக உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயல்படுத்தாமல் இருந்து நீதிமன்ற அவமதிப்பு வரை செல்லும் நிலையை உருவாக்கி, உயரதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது.

அனைத்து உத்தரவுகளும் செயல்படுத்தப்பட்டதை உறுதி செய்து, ஜூன் 27-ம் தேதிக்குள் வாரிய சட்டப்பிரிவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவற்றை பின்பற்றி வாரிய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அலுவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இந்திரா காந்தியின் இளைய மகன் முதல் விஜய் ரூபானி வரை!. விமான விபத்துகளில் உயிரிழந்த 7 பிரபல இந்திய பிரபலங்கள்!

Vignesh

Next Post

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!. பழங்குடி சமூகம் குறித்த சர்ச்சை பேச்சால் நடவடிக்கை!.

Mon Jun 23 , 2025
நடிகர் சூர்யா பட புரமோஷன் நிகழ்ச்சியில் பழங்குடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் […]
vijay devarakonda case 11zon

You May Like