தவெக விஜயுடன் கூட்டணி…? தனது முடிவை அறிவித்த மத்திய அமைச்சர் அமித் ஷா…!

vijay TVK 2025

விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை தொடரும் வகையில் திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். இறுதியில், அன்புமணியின் விருப்பப்படியே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அதுவரைக்கும் ராம தாஸ் – அன்புமணி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இந்தக் கூட்டணி முடிவை அடுத்து மோதல் போக்காக மாறியது.

பாமக-வில் தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியை அங்கீகரித்துள்ளது, அது மட்டுமின்றி கட்சியின் மாம்பழச் சின்னமும் அன்புமணி பக்கம் சென்றுள்ளது. இந்த நிலையில் அந்தக் கட்சி 2026-ல் எந்தக் கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தமிழ்நாடு பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பைஜெயந்த் பாண்டா, கடந்த வாரம் பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்-ஐ சந்தித்துப் பேசினார்.

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.

Vignesh

Next Post

200 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட மர்மங்கள் நிறைந்த குகை..!! உலகையே வியக்க வைக்கும் சிற்பம்..!! எங்கிருக்கு தெரியுமா..?

Thu Oct 30 , 2025
மகாராஷ்டிரா மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றான எல்லோரா குகைகள், இந்தியச் சிற்பக் கலையின் பெருமையை உலகறிய செய்கின்றன. அஜந்தா, எலிபண்டா போன்ற புகழ்பெற்ற குகைகளைப் போலவே, எல்லோரா வெறும் கற்களால் உருவான இடமல்ல. இது பண்டைய சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்பட்ட காவியம். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், புத்த மதம், சமணம் மற்றும் சைவம் என 3 முக்கிய மதங்களின் கலாச்சார சின்னங்களை […]
Ellora Caves 2025

You May Like