ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்..
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் திட்டவட்டமாக கூறி வருகிறார்.. எனினும் எந்த நிபந்தனையும் கட்சியில் இணைய தயார் என்று ஓபிஎஸ் தரப்பு கூறினார்.. அதையும் இபிஎஸ் பொருட்படுத்தவேவில்லை.. சசிகலாவும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்று கூறி வருகிறார்..
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்…
ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் அவரின் ஆதராவளார்களாக இருந்த முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கினார்.. எனினும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.. பின்னர் நேற்று ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு டெல்லி சென்றார் செங்கோட்டையன்.. இந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பினார்..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ நேற்று ஹரித்வார் செல்வதற்காக டெல்லி புறப்பட்டு சென்றேன். நான் சென்று அரைமணி நேரத்திலேயே எனக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன்.. அப்போது நான் ஏற்கனவே கூறியது போல, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் அப்படி இணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினேன்.. எங்களை பொறுத்தவரை அதிமுக வலுப்பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்..” என்று தெரிவித்தார்..
அமித்ஷா செங்கோட்டையனுக்கு என்ன பதில் சொன்னார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. செங்கோட்டையனிடம் பேசிய அமித்ஷா, அதிமுகவை ஒருங்கிணைத்தால் தான் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும் என்பதை தான் முதலில் இருந்தே கூறி வருகிறேன்.. ஆனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை சேர்த்து கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. அதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறினாராம்.. அதிமுகவில் இருந்து வெளியேறவர்களை சேர்க்க வேண்டும் என்று எவ்வளவு பேர் விரும்புகின்றனர் என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.. கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என எல்லோரும் இதனை ஆதரிக்கின்றனர்..
குறிப்பாக வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எல்லாம் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று செங்கோட்டையன் தெரிவித்தாராம்.. அதற்கு அமித்ஷா நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம், அடுத்து என்ன பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை உடன் கூறியுள்ளாராம்.. அமித்ஷாவை சந்தித்த பின், நாம் நினைத்தது நடந்துவிடும் என்ற மகிழ்ச்சி உடன் செங்கோட்டையன் தமிழ்நாடு திரும்பி உள்ளாராம்..
விரைவில் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து, பிரிந்து சென்றவர்களை அதிமுகவை இணைப்பதில் இறுதி நிலைப்பாடு என்ன அமித்ஷா கேட்கப் போகிறாராம்.. அப்போதும் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டினால், அவருக்கு பதில் வேறொருவர் அதிமுக பொதுச்செயலாளராக வரலாம் என்று கூறப்படுகிறது.. அது செங்கோட்டையனாக கூட இருக்கலாம் என்றும் தெரிகிறது.. மேலும் இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.. எனவே எடப்பாடியின் பிடிவாத போக்கு தொடர்ந்தால் அதிமுகவில் அடுத்தடுத்த பூகம்பம் வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது..
Read More : Flash : வாரத்தில் ஒரு நாள் தான்.. செப்.13 முதல் டிச. 20 வரை.. விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியானது..