உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
சூழ்நிலையை அறிந்த ஒரு பெண் டிக்கெட் பரிசோதகரும் ஒரு ராணுவ அதிகாரியும் விரைந்து வந்து அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவினர். சிகிச்சைக்கான சரியான கருவிகள் இல்லாத நிலையில், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்ட பாக்கெட் கத்தியையும் பயன்படுத்தினார்.
மருத்து உபகரணங்கள் ஏதும் இல்லாத நிலையில், அந்தப் பெண்ணின் பிரசவத்தை நல்லபடியாக செய்து முடித்தார். இதன் பின் தாய் மற்றும் குழந்தை இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. ராணுவ மருத்துவர் ரோஹித் பச்வாலாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மருத்துவர்களாக, நாங்கள் எப்போதும் அவசரகால சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவர் ரோஹித் பச்வாலா கூறினார். இந்த நிலையில், ரயில்நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, குழந்தையை பிரசவிக்க உதவிய ராணுவ மருத்துவர் ரோஹித் பச்வாலாவுக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read more: ‘உத்தரபிரதேச டைகர்’ என அழைக்கப்படும் மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்..!!