கள்ளத்தொடர்பு மட்டுமே துன்புறுத்தலாக கருத முடியாது! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

illegal rights

கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணமான தம்பதி ஒருவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. கணவர் மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு குடும்பத்தை சரிவர கவனிக்காமல் கைவிட்டதாக கூறி, கடுமையான மனவேதனை அடைந்த மனைவி தனது பச்சிளம் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்டார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்தது.


இந்த விடுதலையை எதிர்த்து, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், தொடக்கத்தில் பெண் மாயமானதாக சகோதரர் அளித்த முதல் தகவல் புகாரில் கள்ளத்தொடர்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததே தவிர, வரதட்சணை கொடுமை பற்றி எந்த தகவலும் கூறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். பிற்காலத்தில் சாட்சிகள் மூலமாகவே வரதட்சணை புகார் இணைக்கப்பட்டுள்ளதை கீழமை நீதிமன்றம் சரியாகவே கவனித்துள்ளது என நீதிபதி உறுதி செய்தார்.

ஒரு கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே, சட்டத்தின் 498 ஏ பிரிவின் கீழ் மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்ற வரையறைக்குள் வந்துவிடாது என்று தெளிவுபடுத்திய நீதிபதி, கணவர் தற்கொலைக்கு தூண்டினார் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Read More : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்! செஞ்சி சிறுமி வழக்கு! அடுத்தடுத்து வெளியாகும் திக் திக் தகவல்கள்! துப்பு துலக்கிய சிபிசிஐடி!

Next Post

வங்கக் கடலில் நடந்த மாற்றம்! சென்னையை குறிவைக்கிறதா அர்னாப் புயல்? 4 நாட்களில் தீவிரம்!

Fri Oct 23 , 2026
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த வானிலை நகர்வு அடுத்தடுத்த கட்டங்களாக தீவிரமடைந்து, நாளை (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து அக். 25 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்கு – வடமேற்கு திசை வழியே நகர்ந்து, அக். 26 ஆம் தேதி வாக்கில் […]
cyclone n

You May Like