பதிவு திருமணம் செய்ய அழைத்த ஃபேஸ்புக் காதலன்! நம்பி சென்ற 22 வயது பெண்! நடந்தது என்ன?

தலைநகர் டெல்லியில் ஃபேஸ்புக் காதலனை நம்பி திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி டெல்லியைச் சார்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை பதிவு திருமணம் செய்வதற்காக குருகிராமிற்கு சென்று இருக்கிறார். அங்கு சென்ற பெண் தனது காதலனுக்காக 5 மணி நேரம் காத்திருந்துள்ளார். 5 மணி நேரம் கழித்து வந்த காதலரும் அவரது நண்பரும் சேர்ந்து இந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .


இது பற்றி காவல்துறையிடம் தெரிவித்துள்ள அந்த பெண் பேஸ்புக்கின் மூலம் ஆறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான அந்த நபரை காதலித்து வந்ததாகவும் இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அடிக்கடி குருகிராம் வந்து தனது காதலரை சந்தித்து சென்றதாக குறிப்பிட்டுள்ள அந்த பெண் மார்ச் பதினாறாம் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து தான் இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 5 மணி நேரம் தன்னை காக்க வைத்து தனது நண்பருடன் வந்த காதலன் பதிவு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் செக்டார் 55 இல் உள்ள விடுதியில் அரை எடுத்து தங்கியிருக்க சொல்லி இருக்கிறார். அறையில் இந்த பெண் மட்டும் தனியாக இருந்தபோது தனது நண்பருடன் வந்த காதலன் தன்னைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும் அதனை தடுக்க முயன்ற தன்னை இருவரும் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பற்றி தெரிவித்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வாக்குமூலம் மாஜிஸ்ட்ரேட் முன்பு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். எனினும் அந்த இரு நபர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை .

1newsnationuser5

Next Post

இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

Tue Mar 21 , 2023
தமிழக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.. இந்நிலையில், இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. மேலும் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக “ ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க […]
eps

You May Like