அன்புமணி மாஸ்டர் பிளான்…! தமிழகம் முழுவதும் 100 நாட்கள் சுற்றுப்பயணம்…! திட்டம் ரெடி

ramadoss anbumani

தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாமக தலைவர் அன்புமணி வரும் 25-ம் தேதி திருப்போரூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உட்பட 10 அம்சங்களை முன்வைத்து இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ம் தேதி திருப்போரூரில் தொடங்கி முக்கிய தொகுதிகள் வழியாக தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ம் தேதி தருமபுரியில் சுற்றுப்பயணம் நிறைவடையவுள்ளது.

ஜூலை 25 – திருப்போரூர் (தொடக்க விழா), ஜூலை 26 – செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஜூலை 27- காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 28- அம்பத்தூர், மதுரவாயல், ஜூலை 31 – கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1- திருவள்ளூர், திருத்தணி, ஆகஸ்ட் 2- சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 3- ஆற்காடு, வேலூர், ஆகஸ்ட் 4- வாணியம்பாடி, திருப்பத்தூர். அடுத்தகட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால் உடலில் நடக்கும் 10 அதிசயங்கள்!. என்னென்ன தெரியுமா?

Wed Jul 23 , 2025
தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மூளை சக்தியை அதிகரிப்பது முதல், செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை, உங்கள் காலை உணவு வழக்கத்தில் சில ஊறவைத்த பாதாம் பருப்புகளைச் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும். பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்களின் ஒரு சக்தி வாய்ந்த களஞ்சியமாகும், மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைப்பது உங்களுக்கு பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளைத் […]
almonds 11zon

You May Like