ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது..
ஏகாதசி விழாவையொட்டி கோவிலுக்கு பெரும் திரளான பக்தர்கள் வந்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச வேளாண் அமைச்சர் கே. அச்சன்நாயுடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயில் அதிகாரிகளுடன் கூட்ட நெரிசல் குறித்துப் பேசினார். முதல்வர் அலுவலகம் (CMO) வெளியிட்ட அறிக்கையில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் கூடுதல் பணியாளர்களை நிறுத்தியுள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ‘துயரமான சம்பவம்’ தன்னை ‘மனம் உடைத்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நாயுடு தெரிவித்தார்.
“ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காஷிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன. சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொது பிரதிநிதிகளை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : மிளகாய் தூளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!



