ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப்பெற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது எனவும், அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் அரசாங்கம் சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு; உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கான நன்கொடை வசூல் கூட டிஜிட்டல் முறையில் தான் பெறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் இன்று நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது. வாக்குக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் அரசியலில் இல்லை. மக்கள் பணியை திறம்பட செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். அதை நாம் திறம்பட செய்தாலே மக்கள் நமக்கு வாக்கு செலுத்துவார்கள். பெரிய மதிப்பு கொண்ட நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான ஆதரவை வெளிக்காட்ட வேண்டும். அப்போது தான் தேசத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.
Read More: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 2025 செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு