முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.. கட்சியில் இணைந்து ஓராண்டிலேயே, அதாவது 2021-ம் ஆண்டு அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுளுக்கும் மேலாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்..
அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் நோக்கில் அண்ணாமலை நீக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.. ஆனாலும் அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை..
கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது..
இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட அண்ணாமலையில் இந்த திடீர் திட்டம், தமிழக அரசியலில் புதிய களத்தை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன..
பாஜக மேலிடத்தில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், அண்ணாமலை தனக்கென தனி அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்ததாகவும் தெரிகிறது.. அதற்கான முதல்கட்ட நடவடிக்கையையும் அண்ணாமலை தொடங்க உள்ளார்.. மேலும் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக நேற்று சென்னையில் டெல்லி புறப்பட்டு சென்றார் அண்ணாமலை.. வழக்கமாக பாஜக கொடி இருக்கும் வாகனத்தில் செல்லும் அவர் இந்த முறை பாஜக கொடி இல்லாத காரில் சென்றார்.. டெல்லியில் பாஜக தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்து பேசினார்.. அப்போது அண்ணாமலைக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என்று பாஜக மேலிடம் உறுதியளித்ததாம்.. எனினும் அண்ணாமலை தனது முடிவில் திட்டவட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.. தனது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை தேசிய பாஜக தலைமையிடம் அண்ணாமலை அளித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..
பாஜக தேசிய தலைவரை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதற்கான 5 பக்க கடிதத்தை அண்ணாமலை கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.



