Flash : தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்..! இதுதான் காரணம்..! அவரே சொன்ன தகவல்..!

524562 kannamalai 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்..


இந்த நிலையில் கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. தந்தையின் உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் எனது முடிவை தெரிவித்துள்ளேன்..

அதே நேரத்தில் பாஜக தலைமை அடுத்து என்ன வேலை செய்ய வேண்டும், கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும், கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்கிறதோ அதை செய்வேன்.. இப்போதைய சூழலில் அதிகம் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.. அதையும் கட்சி தலைமையிடம் சொன்னேன் அதை புரிந்துகொண்டார்.. எனக்கு ஒதுக்கு பொறுப்புகளுக்கு வேறொரு தலைவர் வருவார்.. வேறு வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்..” என்று கூறினார்.. தேர்தலில் போட்டியிடுது குறித்து  காலமமும், நேரமும் முடிவு செய்யும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்..

Read More : “அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டார்.. வரி ஏய்ப்பு செய்யும் நீ ஊழலை பற்றி பேசலாமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

RUPA

Next Post

கவனம்..! இவர்கள் கீரையை அதிகமாக சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தானது; விஷத்திற்கு சமம்..!

Tue Feb 3 , 2026
பலர் கீரையைக் கொண்டு சுவையான உணவுகளைத் தயாரித்து சாப்பிடுகிறார்கள். கூட்டு, பொறியல், கடையல், குழம்பு எனப் பல வழிகளில் கீரை பயன்படுத்தப்படுகிறது. கீரையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பலர் நம்புகிறார்கள். குளிர்காலத்தில் இந்தக் கீரையை சந்தையில் அடிக்கடி காணலாம். கீரை உடலுக்கு ஆற்றலை அளித்து, இரத்த சோகையைக் குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமான […]
spinach

You May Like