கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. அப்போது அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் தற்போது வரை அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை..
இதனால் அண்ணாமலை பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகள் அமித்ஷா வீட்டில் ஆலோசனை மேற்கொண்டனர்.. இந்த கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் பங்கேற்கவில்லை..
அதே போல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவுக்கு அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனையும் அவர் புறக்கணித்தார்.. மேலும் சமீபத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடத்திய பாஜக கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை..
இதனிடையே சென்னையில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தையும் அண்ணாமலை புறக்கணித்த நிலையில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் நேரடியாக அண்ணாமலை வீட்டிற்கே சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.. இதையடுத்து அன்றைய தினம் பிற்பகலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்..
இந்த நிலையில், அண்ணாமலை நடிகர் ரஜினிகாந்தை அவரின் வீட்டிற்கே சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கட்சிக்குள் தனக்கு பல நெருக்கடிகள் இருப்பதாகவும், தமிழக பாஜகவில் தனக்கு எதிரான காரியங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் ரஜினியிடம் அண்ணாமலை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.. பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும், இனியும் கட்சியில் இருக்கலாமா வேண்டாமா என்ற யோசிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் ரஜினியிடம் புலம்பி உள்ளார்.. அரசியலை விட்டே விலகிவிடலாம் என்ற தனது முடிவை டெல்லி தலைமையிடம் சொல்ல வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினாராம்..
ஆனால் இதனை கேட்ட ரஜினி அதிர்ந்து போனாராம்.. வேறு எதுவும் அவர் அண்ணாமலையிடம் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.. தற்போதும் பாஜக தலைமை ரஜினி உடன் தொடர்பில் இருப்பதை தெரிந்தே அண்ணாமலை ரஜினியின் தனது நிலையை சொல்லியதாகவும் கூறப்படுகிறது.. ரஜினி இதனை பாஜக தலைமையிடன் சொல்வாரா? தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..