ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புக்கு 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

college admission 2025

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. (DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும். விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 23.09.2025 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கைமீறியப் போராட்டம்!. நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்!. அமைச்சர் அறிவிப்பு!.

Tue Sep 9 , 2025
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), […]
nepal Gen z ban on social media

You May Like