ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து மூன்று புள்ளிகளை தூக்கி சம்பவம் செய்திருக்கிறது திமுக. அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் முன்னாள் எம்பி மைத்திரேயன் உள்ளிட்டோர் திமுக கட்சியில் இணைந்தனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் அதிமுக பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைவர்களை திமுக குறிவைத்து வருகிறது.
அதிமுக தலைமை மீது செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, ஆர். காமராஜ், மணிகண்டன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களை திமுகவுக்கு கொண்டு வர நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக அமைச்சர்கள் திமுகவில் இணைந்தால், அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மாறும் நிகழ்வுகள் தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுவான விஷயமாகும். இதன் காரணமாக கட்சிகளின் பலம் மாறுபடும்.
அதிமுகவைச் சேர்ந்த அந்த முக்கிய பிரமுகர், திமுகவில் இணைவதற்கான காரணம் குறித்து பல யூகங்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் கொள்கைகள் மீதான அதிருப்தி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்ப்பு, பதவி கிடைக்காத விரக்தி போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சிலர், அவர் மீதுள்ள வழக்குகள் காரணமாக கட்சி மாறுகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தூள்…! சொத்து வாங்க அல்லது விற்க இனி நேரில் போக வேண்டாம்…! தமிழக அரசின் அதிரடி மாற்றம்…!