தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் வைத்து அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள்
இந்த நிலையில் தான் தமிழக அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில், ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
நோய் தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதத்தில், சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்களும் இளைஞர்களும் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறார்கள்.