பான் கார்டு வைத்திருக்கும் நபரா நீங்கள்…? இதை செய்ய தவறினால் ரூ.10,000 உங்களுக்கு அபராதம்…!

1639200 pan 4

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். ஒருவரின் பான் கார்டு (PAN Card) ஆக்டிவ் ஆக இல்லாத நிலையில், அவர் அதை மீண்டும் ஆக்டிவேட் என்றால், வருமான வரித் துறையால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.


எனவே, உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா இல்லையா என்பதை வீட்டிலிருந்தே எளிதாகச் சரிபார்க்கலாம். நீங்கள் முதலில் வருமான வரித் துறையின் மின்னணு-தாக்கல் e-Filing இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு, கீழே உள்ள “Quick Links” அல்லது “Instant e-Services” பிரிவில் “Verify Your PAN” என்ற ஆப்ஷன் இருக்கும். அங்கே நீங்கள் உங்கள் பான் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பான் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, உங்களுக்கு ஒரு OTP கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு, உங்கள் பான் ஆக்டிவ் ஆக உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் பான் அட்டை ஆக்டிவ் ஆக இல்லை என்றால், முதலில் அது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். அது இணைக்கப்படவில்லை என்றால், உடனடியாக அதை இணைக்கவும். சில நேரங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தாலும், ஆக்டிவ் ஆக இல்லாமல் இருக்கலாம். எனவே ஒரு முறை பான் அட்டை நிலையைச் சரிபார்க்கவும்.

Vignesh

Next Post

2030க்குள் செயற்கைக்கோள்கள் மூலம் குவாண்டம் தகவல்தொடர்பில் இந்தியா முன்னேறும்..! - IIT பேராசிரியர் நம்பிக்கை

Mon Jun 23 , 2025
பாதுகாப்பான தகவல்தொடர்புக்கான புதிய தளமாக விளங்கும் குவாண்டம் தகவல்தொடர்பு தொழில்நுட்பம், இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இந்த துறையில், இந்தியா 2030க்குள் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி நீண்ட தூரங்களில் பாதுகாப்பான குவாண்டம் தொடர்பு ஏற்படுத்தும் திறனைப் பெறும் என, IIT டெல்லி பேராசிரியர் பாஸ்கர் கன்சேரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில், IIT டெல்லி குழு ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் குவாண்டம் விசை விநியோகம் நிகழ்த்தியுள்ளது. இது, இணைக்கும் கேபிள்கள் இல்லாமல், இந்தியாவில் […]
quantum communication using satellite

You May Like