ரசிகர்களே ரெடியா?… CSK – RCB முதல் போட்டி!… இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!… விலை நிலவரம் இதோ!

CSK – RCB: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியின் டிக்கெட் விற்பனை தேதியும், அதன் விலை விவரங்களையும் இதில் காணலாம்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன் ஐபிஎல் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. டிக்கெட் விலை குறித்த அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார். மேலும், அதிகபட்சமாக 7,500 ரூபாய் முதல் 1,700 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் மார்ச் 18ஆம் தேதி காலை 9.30 மணிக்கே திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு விற்கப்படும் அதிகபட்ச விலை உள்ள டிக்கெட் KMK அரங்கில் வழங்கப்படுகிறது. இது கடந்தாண்டு கலைஞர் மு. கருணாநிதி அரங்கு ஆகும். இதில் அமர்ந்து போட்டியை பார்க்க 7500 ரூபாய் வசூலிக்கப்படும். C/D/E Lower ஸ்டாண்டில் அமர்ந்து பார்க்க 1,700 ரூபாயும், C/D/E Upper ஸ்டாண்டில் போட்டியை அமர்ந்து பார்க்க 4000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், I/J/K Lower ஸ்டாண்ட் 4500 ரூபாயும், I/J/K Upper ஸ்டாண்ட் 4000 ரூபாயும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சிஎஸ்கே – ஆர்சிபி போட்டிக்கு Paytm மற்றும் insider.in தளத்தில் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும்.

Readmore: WPL 2024: ரசிகர்களின் கனவை நிறைவேற்றிய மகளிர் அணி!… முதல்முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு!

Kokila

Next Post

Note: சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதிரடி மாற்றம்...! காவல்துறை முக்கிய அறிவிப்பு...!

Mon Mar 18 , 2024
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் ஒரு வாரத்திற்கு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில், பல மாற்றத்திற்கான திட்டங்களைக் வரையறுத்து செயல்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் இதுபோன்ற பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. வாகனங்களின் பயணத்தை […]

You May Like