Note: சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதிரடி மாற்றம்…! காவல்துறை முக்கிய அறிவிப்பு…!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் ஒரு வாரத்திற்கு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில், பல மாற்றத்திற்கான திட்டங்களைக் வரையறுத்து செயல்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் இதுபோன்ற பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்தில் இத்தகைய மாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் நிபுணர் குழுக்கள் இணைந்து புதிய போக்குவரத்து மாற்றத்தை ஏற்பாடு செய்துள்ளது. இப்போக்குவரத்து மாற்றத்தில். கோயம்பேட்டில் இருந்து கே.கே.நகர் நோக்கி செல்லும் வாகனங்கள் வலதுபுறம் தடை செய்யப்பட்டுள்ளது.

அசோக் பில்லர் முதல் லக்ஷ்மண ஸ்ருதி வரை யு-டர்ன் தடைசெய்யப்பட்டுள்ளது; அதற்கு பதிலாக அவர்கள் வழங்கப்பட்ட புதிய U-டர்ன் பயன்படுத்த முடியும். அதற்கு பதிலாக, அவர்கள் 100 மீட்டருக்கு முன்னால் புதிதாக ஏற்ப்படுத்தப்பட்ட U-திருப்பத்தை பயன்படுத்தி, மேலும் PT ராஜன் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். அசோக் பில்லர் மற்றும் கோயம்பேடு ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் யூ- டர்ன் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வழங்கப்பட்ட புதிய U-டர்ன் பயன்படுத்த முடியும்.

இந்த நவீன மாற்றுப்பாதையின் நோக்கம் போக்குவரத்து நெரிசலை கூர்ந்து கண்காணிப்பதற்கு ஏதுவாக உள்ளது. மேற்கூறிய மாற்றுப்பாதை இன்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு ஒரு வாரத்திற்கு தொடரும்.

Vignesh

Next Post

Income Tax: தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை 24 × 7 கட்டுப்பாட்டு அறை...!

Mon Mar 18 , 2024
தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. […]

You May Like