ஓட்டு போட ஊருக்கு போறீங்களா..? ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிச்சா ஒரே ஒரு கால் பண்ணுங்க..!

amni bus

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் தனியார் பேருந்து முனையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கடைசி நேர முன்பதிவு, அதிக தேவை ஆகியவற்றை காரணமாகக் கொண்டு சில நிறுவனங்கள் “டிக்கெட் விலை உயர்வு” என்ற பெயரில் பயணிகளிடம் கூடுதல் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, பொதுமக்கள் இதுபோன்ற கட்டணக் கொள்ளையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து உடனடியாக புகார் அளிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க கட்டணமில்லா எண்: அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தவிர, சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகங்களின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் நேரடியாகவும் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விதிமீறலில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் கால பயண நெரிசலை சிலர் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் அதிகாரப்பூர்வ கட்டண விவரங்களை சரிபார்த்து, முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், தேவையற்ற இடைநிலை முகவர்கள் மூலம் டிக்கெட் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more: 7.50% வட்டி.. 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் முதிர்வுத் தொகை.. பாதுகாப்பான முதலீடு! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

English Summary

Are you going to the city to vote? If you charge extra for Omni buses, just give me a missed call!

Next Post

ரூ. 7 லட்சம் முத்ரா கடன்..! வெறும் ரூ. 860 செலுத்தினால் போதுமா..? உண்மை என்ன..?

Tue Apr 21 , 2026
மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘முத்ரா’ (Mudra) திட்டம் எவ்வளவு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் மிக எளிதாகத் தொழில் கடன்களைப் பெற முடியும். ஆனால், மக்கள் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசுத் திட்டங்களின் பெயரால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் மோசடிகளுக்கு எதிராக மக்கள் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும், இணையக் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய புதிய வழிகளில் தங்கள் மோசடி வலைகளை […]
mudra loan

You May Like