Pension: உங்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில் பிரச்சினையா…? 25-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்..!

tn Govt subcidy 2025

ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான கோரிக்கைகளை ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள். ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் கீழ்காணும் படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 62, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரிக்கு 25.08.2025-க்குள் அனுப்பி வைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஷாக்!. அரிய நோயால் 2 பேர் பலி!. 58 பேர் பாதிப்பு!. லெஜியோனேயர்ஸ் நோய் என்றால் என்ன?. அறிகுறிகள் இதோ!

Wed Aug 6 , 2025
நியூயார்க்கில் ஹார்லெம் பகுதியில் லெஜியோனேயர்ஸ் நோயின் தாக்கத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நோய்க்கு 58 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஹார்லெமில் வசிக்கும் பலரும் இருமல், காய்ச்சல், சளி, வலிகள் அல்லது மூச்சுத் திணறல் போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நாள்பட்ட சுவாச நோய் உள்ளவர்கள் அதிக […]
Legionnaires disease 11zon

You May Like