நம்மில் பலருக்கு ஒவ்வொரு வகையான படங்களை பிடிக்கும். ஒரு சிலருக்கு காதல்-காமெடி படங்கள் பிடிக்கும். ஒரு சிலருக்கு த்ரில்லர்-ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். ஸ்பெஷலான சிலருக்கு பேய்-த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பேய் பட பிரியர்கள் பலர், மயிர்கூச்சரிய செய்ய வைக்கும் அளவிற்கு பயத்தை கொடுக்கும் படங்களை தனியாக பார்க்க வேண்டும் என்று விரும்புவர்.
ஒரு திரைப்படம் என்பது விருவிருப்பாகவும், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்கள் அதிகமாக படத்தில் விருவிருப்பு மற்றும் டுவிஸ்ட்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அதை எப்போதுமே பூர்த்தி செய்வது ஹாரர் படங்கள் என்றே சொல்ல வேண்டும். கோலிவுட்டின் பிரபலமான ஜானர்களில் ஒன்றான ஹாரர் திகில் திரைப்படங்கள் பார்வையாளர்களை குலைநடுங்க வைத்து வருகிறது. இந்த உலகில் ஹாரர் படங்களுக்கு என்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற படங்கள் OTT தளங்களில் வருவதன் காரணமாக இதன் புகழ் பல மடங்கு உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
இந்தநிலையில் இரவு 10 மணிக்கு மேலும் இந்த படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தூங்க செல்லும் முன், அதாவது இரவு 10 மணிக்கு அத்தகைய படங்களை பார்ப்பது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தையும் அதிகரிக்க செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Readmore: Holiday: வார இறுதி விடுமுறை… தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு…!