“தினமும் செக்ஸ் டார்ச்சர்.. அப்பாகிட்ட சொல்லாத” கதறி அழுத அக்கா.. திடீரென கட் ஆன போன்..!! வரதட்சணை கொடுமையால் நடந்த சோகம்..!!

dowry 2025 08 06 16 54 17 2

இந்தியாவில் பெண்களைத் துன்புறுத்தும் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அனுராக். இவர் வணிக கடற்படை அதிகாரியாக உள்ளார். கடந்த மாதம் 25ஆம் தேதி மது என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தின் போது மதுவின் குடும்பத்தினர் அவருக்கு நகை, பணம் என சீர்வரிசையை அள்ளி கொடுத்துள்ளனர். ஆனால் கல்யாணம் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு உங்க வீட்டில் இருந்து கொஞ்சம் நகையும், 15 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிட்டு வான்னு அனுராக்கும் அவருடைய குடும்பமும் சேர்ந்து மதுவை டார்ச்சர் செய்துள்ளனர்.

இதனை மது செய்ய முடியாது என மறுக்கவே கணவன் அனுராக் அவருடைய உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். தினமும் அவரை கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல், பாலியல் ரீதியிலான துன்புறுத்த ஆரம்பித்த அனுராக், மதுவுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி, ஆபாச படத்தை காண்பித்து அதில் இருப்பது போல் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்காத நிலையில் அவருடைய சித்தி மகளான ப்ரியாவிடம் போனில் சொல்லி அழுதுள்ளார். அத்துடன் எக்காரணம் கொண்டு இந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். தினமும் ப்ரியாவிடம் மது போன் பேசிய வந்ததால் ஆத்திரமடைந்த அனுராக், “நீங்க ரெண்டு பேரும் என்ன லெஸ்பியனா?” என்றெல்லாம் கேட்டு சித்திரவதை செய்துள்ளார்.

கடந்த நான்காம் தேதி காலையில தன்னோட தங்கச்சி பிரியாவுக்கு போன் பண்ண மது “சீக்கிரம் வீட்டுக்கு வா இல்லன்னா. அவன் என்னைய கொலை பண்ணிடுவான்” சொல்லிட்டு இருக்கும்போது, போன் கட் ஆகியுள்ளது. பிரியாவும் வழக்கம் போல சண்டையா இருக்கும்னு சொல்லி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதுக்கு மறுநாள் காலையில் மது தூக்கு போட்டு தற்கொலை செய்தி கொண்டதாக ப்ரியாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது.

உடனே காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு தெரிந்த விஷயங்களை வாக்கு மூலமாக அளித்துள்ளார். அதே நேரம் மது தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவளை அனுராக் தான் அடித்து கொலை செய்ததாக தனது புகாரில் கூறியுள்ளார். அதுக்கு பிறகு வழக்கு பதிவு செஞ்ச போலீஸ் மதுவுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சகோதரி பிரியா அளித்த புகாரி பேரில் அனுராக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த தமிழக வீரர்.. அடுத்த பந்தயம் எங்க தெரியுமா..?

English Summary

As dowry atrocities against women continue to increase in India, the death of another woman due to dowry atrocities has caused a stir.

Next Post

#Breaking : வரலாறு காணாத உச்சம்.. இன்று ரூ.75,000-ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்…

Thu Aug 7 , 2025
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]
1730197140 4512 2 1

You May Like