#Breaking : கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல்.. இந்திய தேர்தல் ஆனையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றனர்.. ஆளும் பாஜகவுக்கு 119 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 75 மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு 28 இடங்களும் உள்ளன. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது..

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர் “ கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும். மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.. ஏப்ரல் 1 முதல் 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வசதி செய்யப்படும்.. ” என்று தெரிவித்தார்..

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முக்கிய தேதிகள்

  • வாக்குப்பதிவு : மே 10
  • மனுதாக்கல் ஆரம்பம் : ஏப்ரல் 13
  • மனுதாக்கல் முடிவு : ஏப்ரல் 20
  • வேட்புமனு பரிசீலனை : ஏப்ரல் 21
  • வேட்புமனு திரும்ப பெற : ஏப்ரல் 24
  • வாக்கு எண்ணிக்கை : மே 13

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதனால் அங்கு 4 முனை போட்டி நிலவுகிறது. முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 124 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை மே 25 அன்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி போன்ற வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது..

இதே போல் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.. அதே போல் ஆம் ஆத்மி கட்சி 80 பேர் கொண்ட முதல் பட்டியலை மார்ச் 20 அன்று வெளியிட்டது. மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் மற்றொரு முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்துள்ளது. தங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி நேற்று அறிவித்திருந்தார்..

Maha

Next Post

சின்னத்திரை நட்சத்திரங்கள் நவீன் மற்றும் கண்மணிக்கு நடைபெற்ற வளைகாப்பு….! புகைப்படங்கள் இதோ…..!

Wed Mar 29 , 2023
கடந்த வருடம் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணியும், சின்னத்திரை நடிகர் நவீனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இத்தகைய சூழ்நிலையில் தான் அவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக முன்பே மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். இதன் காரணமாக, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில், தற்போது கண்மணிக்கு வளைகாப்பு நடைபெற்று முடிந்து […]

You May Like