கோவையில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
சூலூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தனியார் கோயில் நிதி பிரச்சனையை தீர்த்து வைக்க அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை முதலில் கொடுப்பதாக கூறியுள்ளார். ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் கோவிலை இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திராவின் கைதை தொடர்ந்து மேலும் பலர் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது. லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.