உலகப்புகழ்பெற்ற 71-வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், கனடா, இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்துகொண்டனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆர் போனி கேப்ரியல் 2022-ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு நீல நிற கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
இவரைத்தொடர்ந்து வெனிசுலாவின் அமண்டா டுடாமெல் இரண்டாவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் ஆண்ட்ரீனா மார்டினெஸ் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் முடிசூட்டப்பட்டது. இந்த நிலையில் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தின் மதிப்பு $5.58 மில்லியன் அதாவது சுமார் ரூ.49 கோடி என்ற தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.