வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… எந்தெந்த மாவட்டத்தில் கனமழை…? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

cyclone rain 2025

தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு தெலங்கானா மற்றும் அதையொட்டிய விதர்பா பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மாவட்டங்களிலும், 17-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், 18-ம் தேதி சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 19-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில்..!! ஆறுபடை வீடும் ஒரே இடத்தில்..!! தீராத தோஷம் கூட தீரும்..!!

Mon Sep 15 , 2025
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தில் குன்றின் மீது பேரழகோடு வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்கள், தேவர்கள், ஏன் நாகங்கள் கூட தினமும் வந்து வழிபடும் அரிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த கோவில் அமைந்துள்ள மலை, நட்சத்திர கிரி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோவில், முருகப் பெருமான் […]
Murugan 2025

You May Like