தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது.

நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குலதெய்வ வழிபாட்டை மட்டும் ஏன் புறக்கணிக்கக் கூடாது தெரியுமா..? இதை படித்தால் இனியும் போகாம இருக்க மாட்டீங்க..!!

Fri Aug 29 , 2025
ஒருவரின் வாழ்வில் பல்வேறு தெய்வங்களை நாம் காணலாம். குலதெய்வம், இஷ்டதெய்வம், வழிபாடு தெய்வம், மந்திர தெய்வம் என ஒவ்வொன்றும் தனித்தனி பங்களிப்பை வழங்கினாலும், அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் குலதெய்வத்திற்கு தான் வழங்கப்படுகிறது. காரணம், இது யாரும் உருவாக்காத, வம்ச பரம்பரையாக வழிநடத்தப்படும் ஒரு தெய்வ வழிபாடாகும். பழமையான குடும்ப மரபுகளில், பண்டைய காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் குலதெய்வமாக மாறுகிறது. இந்த வழிபாடு வழியாக, ஒரு குடும்பத்தின் எல்லா […]
Kula Deivam Temple 2025

You May Like