Weather: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… தமிழகத்தில் 15-ம் தேதி இடி மின்னல் கூடிய கனமழை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வட தமிழகம் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12,-ல் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

13-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நுழைவாயிலில் விநாயகர் சிலையை எப்படி வைப்பது?. சரியான திசை, விதிகள் மற்றும் மங்களகரமான அறிகுறிகள் இதோ!

Mon Nov 10 , 2025
வீட்டில் ஒரு கடவுளின் சிலையை வைத்திருப்பது மங்களகரமானது, ஆனால் நீங்கள் பிரதான நுழைவாயிலில் விநாயகர் சிலையை நிறுவ விரும்பினால், அதனுடன் தொடர்புடைய வாஸ்து விதிகளைப் புரிந்துகொள்வது முக்கியம். சில வாஸ்து விதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது வீட்டிற்குள் நேர்மறையை கொண்டு வரும். பிரதான நுழைவாயிலில் விநாயகர் சிலையை வைப்பது தொடர்பான வாஸ்து விதிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். தெற்கு திசை: விநாயகர் சிலை தெற்கு நோக்கி வைக்கப்படக்கூடாது என்று […]
Ganesha idol

You May Like