Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை…!

rain 1

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் காரணமாக, வட தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 12ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். நாளை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more: வந்தாச்சு..‌! தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை & பதிவு கட்டணம் நிர்ணயம்…! பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு…!

Vignesh

Next Post

டாய்லெட்டில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்றீங்களா?. மூலநோய் ஏற்படும் ஆபத்து!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Sat Aug 9 , 2025
கழிப்பறையில் நீண்ட அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும், அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால் ஆசனவாய்ப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்த நாளங்கள் வீங்கி மூல நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வந்த பிறகு உலக அளவில் எண்ணற்ற விஷயங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை, தொழில் என எக்கச்சக்கமான துறைகளுக்கு இணையதள தொழில்நுட்பம் மிகப்பெரிய […]
toilet phone 11zon

You May Like